Adsense

Internet of things ( IOT) என்பது பணம் கொட்டும் துறையா?

 இது 1990 களின் நடுவில், மென்பொருள் எழுதுவது பணம் கொழிக்கும் துறையா என கேட்பதை போல. அப்போது துறையில் இருந்த நபர்களுக்கு மட்டும் அதன் மகத்துவம் ஓரளவு புரிந்திருக்கும். ஆனால் அவர்கள் கூட மென்பொருள் இவ்வளவு தூரம் அனைத்து இடத்திலும் நுழைந்திருக்கும் என எதிர்பார்த்திருப்பது சந்தேகமே.

அதேபோல IOT துறையும் தற்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இதில் industry standard என open protocol கள் இப்போதுதான் மெதுவாக உருப்பெற்று வருகின்றன. இதன் சில சிக்கல்களையும், அதற்கு எதிர்பார்க்கும் தீர்வுகளையும் இங்கு முன்வைக்கிறேன்.




இந்த IOT சேவைகளை சில வருடங்களுக்கு முன்னர்தான் Apple, Amazon, Google போன்ற நிறுவனங்கள் தங்கள் platform-ல் ஒரு பகுதியாக கொண்டுவந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளனர். அதாவது Business to Consumer மாடல்.

ஆனால் IOT யின் பயனை பல நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்தே அனுபவித்து வந்துள்ளனர். இன்டர்நெட் டில் இணைக்காமல், தங்களுடைய லோக்கல் network-ல் வைத்து இந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வந்த பல automation களை தற்போது இன்டர்நெட் first என கொண்டு வந்து IOT என்கிறோம்.

இதில் பல வருடங்களாக Crestron, Control4, Lutron என சில niche நிறுவனங்கள் இயங்கி வருகிறார்கள். இவர்களுடைய தொழில்நுட்பத்தைத்தான் நமது IT நிறுவனங்கள் பெரும்பாலும் customize செய்து, அதில் data collection, Machine Learning என சேவை வழங்குகிறார்கள். அதாவது Business to Business மாடல்.

ஆனால் இதில் உள்ள பல sensor-கள் மற்றும் centralised control system கள் கணினியுடன் தொடர்புகொள்ள, இன்னமும் Serial & Parallel ports, VGA, RJ2 connector, USB, IR, Bluetooth 2.0 போன்ற outdated தகவல் பரிமாற்ற protocols களை பயன்படுத்துகிறார்கள். இதனால் தற்போதைய எந்த கணினி, மொபைல் operating system களும் இந்த industrial sensors & controllers களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது.

தற்போது மலிவான Raspberry Pi யில் கூட High throughput wireless streaming வந்துவிட்ட இக்காலத்தில் அந்த out dated communication protocol களை விட்டு விரைவில் வெளியேற வேண்டும். ஆனால் Backward compatibility என்ற பெயரில் outdated protocols கொண்ட சாதனங்களை நமக்கு விற்று, ICU வைத்து பணம் கறப்பதை போல கறந்து வருகிறார்கள். இந்த தேவையில்லாத ஆணிகளை(பழைய protocols/ports) பராமரிக்க வேண்டிய காரணத்தினால்தான் centralised IOT controller சாதனங்கள் யானை விலை குதிரை விலையில் உச்சத்தில் இருக்கின்றன!.






என்னைப்போன்ற DOS to Windows 95 பயனர்கள் இதை அனுபவித்திருப்பார்கள்; அந்த காலத்தில் ஒரு mouse வாங்கினால் கூட அதற்கு device driver தனியாக இன்ஸ்டால் செய்தால்தான் பயன்படுத்த முடியும். அப்போதெல்லாம் பிரிண்ட்டர்கள் வாங்கும்போதெல்லாம் அதன் டிரைவர் தனியாக இன்ஸ்டால் செய்தால்தான் Windows & Mac இயங்குதளம் அடையாளம் கண்டு கொள்ளும். அதுவும் Linux பயன்படுத்துபவர்கள் device டிரைவர் கிடைக்காமல் படும்பாடு சொல்லி மாளாது. ஆனால் தற்போது அனைத்து பிரிண்டர் தயாரிப்பாளர்களும் ஒரு common open standard பின்பற்றுகிறார்கள். அனைத்து இயங்குதளங்களும் தானாகவே பிரிண்டர்களை அடையாளம் கண்டுகொள்கின்றன.

இப்படி முக்கிய computing platform கள் அனைத்தும் IOT சாதனங்களை தானாகவே அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிக்கும்போதுதான் அது mainstream ஆகிவிட்டது என சொல்ல முடியும். தற்போது IOT என்ற பெயரில் பயன்படுத்தப்படும் பல sensorகள், controller கள் நேரடியாக கணினியுடன்/இணையத்துடன் தொடர்பு கொள்வதில்லை. அதற்கென கணினியுடன் தொடர்பு கொள்ள ஒரு இடைத்தரகர்/interface செய்யும் சாதனங்கள் கொள்ளை விலையில் விற்கப்படுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த சாதனங்களுக்கு mass production இல்லை, அதே சமயம் அப்படி mass production செய்யுமளவிற்கு அந்த control சாதனங்கள் தொழில்நுட்பத்தில் மேம்பட்டவையும் அல்ல.

இந்த இடைத்தரகர்/interface வேலை செய்யும் IOT சாதனங்கள் ஒழிய வேண்டும். இந்த விஷயத்தில் நிறுவனங்களை விட பொதுமக்கள் விரைவில் புதுமையை/மேம்பட்டதை தேர்ந்தெடுப்பார்கள். காரணம் பொதுமக்களுக்கு Legacy Problem என்பது பொதுவாக இருக்காது. இதற்கு Raspberry Pi போன்ற மலிவான ஒரு general purpose device வைத்தே கிட்டத்தட்ட அனைத்து சென்சார்களையும், கண்ட்ரோலர்களையும் இணையத்தில் இணைக்க முடியும். இதற்கு ஒரு robust software எழுதினால் அதைவைத்து Crestron, Control4 போன்ற நிறுவனங்களின் பல லட்சம் விலையில் விற்கும் இடைத்தரகர்/interface சாதனங்களை replace செய்ய முடியும்.

முக்கியமாக IOT consultant கள் வழக்கமான crestron, KNX போன்ற legacy eco system களில் training எடுத்துக்கொண்டு, அவர்களின் விலை உயர்ந்த centralised control device நம்மை வாங்க வைத்து அதை நமக்கு configure செய்து தந்து சம்பாதிக்கிறார்கள். இதை தவறென்று சொல்ல முடியாது. தற்சமயம், ஒரு complete IOT package வேண்டுமென்றால் இந்த legacy நிறுவன தயாரிப்புகளை நாடி செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. Amazon, Apple, Google போன்றவைகள் இன்னமும் ஒரு complete solution என்ற நிலையை அடையவில்லை.

IOT யை பயன்படுத்துவது என முடிவெடுத்த பிறகு, இந்த backward compatibility என்ற வார்த்தைக்கு மட்டும் நாம் மயங்கி விடக்கூடாது. எனக்கு அதெல்லாம்(backward compatibility) வேண்டாம், லேட்டஸ்ட் ஆக வெறும் வயர்லெஸ், USB C, HDMI போன்ற protocols வழியே மட்டும் சென்சார்களும் கண்ட்ரோலர்களும் பயன்படுத்திக்கொள்கிறேன் என முடிவெடுத்துவிட்டால், உண்மையில் நமக்கு விலையும் குறையும், சேவையும் சிறப்பாக இருக்கும். ஆனால் இது IOT consultant களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்காது. அவர்கள் நமக்கு configure செய்ய, பெரிதாக lecture கொடுக்க எதுவும் இருக்காது.

ஒருகாலத்தில் லிப்ட் இயக்குவதற்கு தனியாக லிப்ட் operators இருப்பார்கள். ஆனால் இன்று லிப்ட் தானாகவே சமத்தளத்தை அறிந்து சரியாக நிற்கும் என மேம்பட்ட பிறகு, வெறும் பட்டனை அமுக்குபவர்களுக்கு எதற்கு தனியாக சம்பளம் என அவர்களின் பணி வழக்கொழிந்துவிட்டது.

அதுபோல ZigBeeMatter போன்ற நவீன protocols/standards உள்ள சாதனங்களை நாம் தேர்ந்தெடுக்க பழகிவிட்டால், IOT consultant கள் நமக்கு backward compatibility என்ற பெயரில் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த Centralised controller சாதனங்கள் தேவைப்படாது; நம்மிடம் ஏற்கனவே உள்ள Google, Apple, Amazon சாதனங்களே போதுமானது.

அதாவது இன்று Windows, Mac, iOS, Android களின் built-in printer menu அனைத்து பிரின்டர்களையும் கையாள்வது போல; ஒவ்வொரு பிரிண்டரின் தனித்தனி software installation வழக்கொழிந்துவிட்டது. அதாவது ஒவ்வொரு IOT சாதனத்திற்கும் தனி செயலி, அல்லது தனி connecting interface device/port என்பது வழக்கொழிந்து computing platform களின் அடிப்படையாக IOT சாதனங்கள் மாற வேண்டும்.

IOT யின் பயன், உபயோகம் பற்றி அறியாதவர்களுக்கு இந்த IT consultant கள் தேவைதான். ஆனால் இந்த backward compatibility என்ற அர்த்தமில்லாத obsession மட்டும் இல்லாமலிருந்தால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் IOT யின் விலை இருக்கும்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, IOT eco system இன்னமும் mature ஆகவில்லை என்பதும், தற்சமயம் முழுமையான package என்பது costly & inefficient என்பதும்தான்.

தற்சமயம் இந்த mainstream platform நிறுவனங்களான Amazon, Apple, Google, Microsoft போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் voice assistant, Home control app களுடன் இணைக்க வெளிப்படையான Software Development Kit களை வெளியிட்டு வருகிறார்கள். இனிமேல் இந்த Open API களுடன் இணைக்காமல் ஒவ்வொரு IOT நிறுவனமும் தனியாக ஒரு App வைத்துக்கொண்டு அவர்களின் சாதனத்துடன் மட்டும் தனித்தவில் வாசிப்பது முடிந்த வரை குறைய வேண்டும்.





இது விரைவில் நடந்தேறி Industrial மற்றும் home automation சென்சார்/கண்ட்ரோல் சாதனங்களை இந்த common/open API களுடன் தொடர்புகொள்ளும்படி தயாரித்தால் அதில் நாம் first mover advantage பெற வாய்ப்புண்டு. ஒவ்வொரு IOT சாதன நிறுவனமும் தனியாக நம்மை ஒரு app டவுன்லோட் செய்ய சொல்வது ஒவ்வொரு பிரிண்ட்டருக்கும் டிரைவர் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது போல ஆகும்.

ஆனால் துரதிருஷ்டமாக இப்படி சென்சார்கள் கண்ட்ரோலர்கள் hardware தயாரிப்பிற்கு நாம் சீனாவை நம்பியே உள்ளோம். Manufacturing-ல் இப்படி சென்சார்கள், கண்ட்ரோலர்கள் மற்றும் general purpose low cost CPU விற்கு நாம் முக்கியத்துவம் தந்தால் சிறப்பாக இருக்கும். அப்படி செய்யாவிட்டாலும் கூட சீனாவே IOT சாதனங்கள் தயாரிப்பில் கோலோச்சினாலும் நாம் Cloud Computing-ல் Snowflake எனும் நிறுவனத்தின் பிசினஸ் மாடலை பின்பற்றலாம்.

Cloud Computing துறையில் Snowflake எனும் நிறுவனம் cloud சேவை வழங்குபவர்கள் யாரென்பதை பற்றி கவலைப்படாமல்(Cloud Service provider agnostic) ஒரு unified முகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதாவது நாம் தனித்தனியாக AWS, Azure, Gcloud என multi cloud development செய்வதற்கு பதிலாக, Snowflake நிறுவனத்தின் சாப்ட்வேரில் கிளவுட் பணிகளை ஒருமுறை செய்தால் போதும், அங்கிருந்து AWS, Azure அல்லது Gcloud என எந்த சேவையில் வேண்டுமானாலும் நமது சௌகர்யப்படி இந்த மூன்று சேவைகளையும் இணைத்து கூட deploy செய்து கொள்ள முடியும்.

அதுபோல நாம் சென்சார்கள், கண்ட்ரோலர்களுக்கு அமேசான், ஆப்பிள், Google மற்றும் microsoft நிறுவன API களுடன் இணைந்து பணியாற்றும்படி unified சாப்ட்வேர் தயாரித்தால், IOT யின் பயனை விரைவாக platform independent ஆக பெற முடியும். அதாவது இந்த புதிய சாப்ட்வேர் தான், IOT hardware சாதனங்களை அனைத்து கிளவுட் மற்றும் computing platform களுடன் இணைக்கும் புதிய இடைத்தரகராக/interface ஆக அமையும்.

இப்படி ஒரு நிலை வரும்போது, நமது வீடு, அலுவலகம், சாலைகள் அனைத்தும் context/situation விழிப்புணர்வு கொண்டவையாக மாறத்தொடங்கும். பல விரயங்கள், விபத்துக்கள் குறையும். வாழும் சூழல், ஆரோக்கியம் மேம்படும். நமது இப்போதைய வாழ்க்கை கற்காலத்தை போல அப்போது தெரியும். இந்த மாற்றத்தில் பங்கு பெரும் IOT value chain-ல் உள்ள அனைவர்க்கும் நிச்சயம் நன்றாக பணம் சம்பாதிக்க வழி உருவாகும்.

newest questions on wordpress