Adsense

NFT பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். NFT... டிஜிட்டல் உலகில் மாற்ற முடியாத டோக்கன்! புதிய தொழில்நுட்ப ஆச்சர்யம்! பல கோடிகள் புரளும் மார்க்கெட்!

 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீபிள் (Beeple) நிறுவனத்தின் 5000 புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் ஆர்ட் (digital art) ஒன்று 500 கோடிக்கு விற்பனையானது. அதே போல, டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டார்ஸியின் முதல் ட்வீட் 2.9 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

NFT



இரண்டு மாதங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் தன்னுடைய முன்கதைகள், தன்னுடைய ஆட்டோகிராப்-வுடன் கூடிய படத்தின் போஸ்டர்கள், மேலும் பல பரிசுகளை என்.எஃப்.டி (N.F.T)-யாக விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் தனது பிறந்தநாளன்று கமல்ஹாசனும் என்.எஃப்.டி-யில் களம் இறங்கப்போவதாய் அறிவித்திருந்தார். தனது 62 வருட திரை வாழ்க்கையில் நிகழ்ந்த எண்ணற்ற விழாக்களில் தனக்கு கிடைத்த எண்ணற்ற பொக்கிஷங்களை ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து என்.எஃப்.டி-யாக விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

கமல்ஹாசனைத் தொடர்ந்து சன்னி லியோன், சல்மான் கான் என்று இந்திய சினிமா நட்சத்திரங்கள் என்.எஃப்.டி-இல் காலடி எடுத்துவைக்கத் துவங்கிவிட்டனர். ஏ.ஆர். ரகுமான் கூட தன்னுடைய `ராக்ஸ்டார்' படத்தின் பாடல்களை NFT-ல் விடப்போவதாய் ட்வீட் செய்திருந்தார்.

தற்போதைய சூழலில், கிரிப்டோவின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதன் கூடவே சேர்ந்து இலவச இணைப்பாய் என்.எஃப்.டி-ன் மதிப்பும் அதிவேகமாய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.



Non Fungible Token என்பதே NFT-ன் முழு விரிவாக்கம் ஆகும். இதில் Fungible என்றால், ஒரு பொருளுக்கு மாற்று என்று அர்த்தம். அதாவது, இப்போது நான் ஒரு ப்ளூ சட்டை வைத்திருந்தால், நாளை அதே போல வேறு ப்ளூ சட்டை வாங்கிக்கொள்வேன். இதில் இந்த ப்ளூ சட்டை என்பது Fungible product. ஆனால், நான் எத்தனை ப்ளூ சட்டை வாங்கினாலும் அது என் முதல் ப்ளூ சட்டை போல வராது. அது ஏதோ ஒரு வகையில் சிறப்பானதாகத்தான் இருக்கும். அது மாதிரியான் என் முதல் ப்ளூ சட்டைதான் Non Fungible product.





உதாரணத்திற்கு `24' படத்தில் வில்லன் சூர்யா ஒரு டைம் மெஷின் வாட்சைத் தேடிக் கொண்டிருப்பார். அப்போது அந்த வாட்ச் போலவே ஒரு விளம்பரம் கொடுத்து, இந்த வாட்சை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்துகொடுத்தால் அவர்களுக்கு 10 கோடி என்று அறிவித்திருப்பார். இதில் பலர், அதே போல வாட்சை டிசைன் செய்து எடுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அது எல்லாமே அந்த வாட்சின் டூப்ளிகேட். அதனால் அது Fungible. ஆனால், ஹீரோ சூர்யாவிடம் மட்டுமே உண்மையான டைம் மெஷின் வாட்ச் இருக்கும். அதுதான் Non Fungible.



அந்த ஒரிஜினல் வாட்சை வாங்க வில்லன் சூர்யா எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுப்பார். எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார். அதே போலத்தான் எந்த ஒரு பொருளின் ஒரிஜினல் மதிப்பு எப்பவுமே எல்லாருக்கும் ஸ்பெஷல்தான். அதை அதிக விலை கொடுத்து வாங்க யாராவது தயாராக இருப்பார்கள். ஆனால், அதை நேரடியாக பிசிக்கலாக (physical format) வாங்காமல் இ-ஃபார்மேட்டில் (e-format) வாங்கினால், அதுதான் டோக்கன்.



உதாரணமாக, மோனாலிஸா புகைப்படம் மிகவும் விலை மதிப்பு மிக்கது. அதன் உரிமையை நான் 10 கோடி கொடுத்து வாங்குகிறேன் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த புகைப்படம் பலரிடம் இருக்கும். ஆனால், அதனுடைய உரிமை (ownership) என்னிடம் மட்டும்தான் இருக்கும். நான் அந்தப் படத்தின் உரிமையாளர் என்று ப்ளாக்செயினில் பதிவாகி இருக்கும். அதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்தினால், அதற்குச் சொந்தக்காரன் என்கிற முறையில் எனக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீபிள் (Beeple) நிறுவனத்தின் 5000 புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் ஆர்ட் (digital art) ஒன்று 500 கோடிக்கு விற்பனையானது. அதே போல, டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டார்ஸியின் முதல் ட்வீட் 2.9 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.


என்.எஃப்.டி குறித்து பாடிய ஒரு பாட்டை என்.எஃப்.டி-யிலேயே விற்றார் எலான் மஸ்க். இந்த என்.எஃப்.டியைப் பொறுத்தவரை, எது வேண்டுமானாலும் விலை போகும், அதற்கான மதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை எல்லாம் தாண்டி. உதாரணமாக, ஒரு பாகிஸ்தான் மீம் 51,530 டாலருக்கு விலை போனது. ஆனால், அது வெறும் ஒரு மீம் தான். அதே போல, நியான் கேட் (Nyan cat) எனும் மீம் வீடியோ 4 கோடி டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.




ஒரு பாட்டு அல்லது மீம் அல்லது ஒரு படைப்பு இந்த அளவுக்கு விலை போவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்கிறீர்களா? இதோ இந்த விளக்கத்தை அவசியம் படியுங்கள்.

பொதுவாக, பொருளாதாரத்தில் மூன்று விதமான பொருள்கள் உள்ளன. Normal Goods, Giffen Goods, Veblen Goods என்பதே அந்த மூன்று வகை பொருள்கள். இதில் நார்மல் குட்ஸ் என்பவற்றின் விலை ( price ) அதிகரிக்கும்போது தேவை (demand) குறையும். தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100 எனில், ஒரு கிலோ வாங்குவதற்கு பதில் அரை அல்லது கால் கிலோ வாங்குவது இதற்கு உதாரணம்.

ஆனால் Giffen மற்றும் Veblen goods-யைப் பொருத்தவரை விலை (price) அதிகமானாலும் தேவை (demand) குறையாது. இதற்கு உதாரணமாக, அரிசி அல்லது தண்ணீரை சொல்லலாம். அரிசி விலை அதிகரித்தாலும், நாம் சாப்பிடுவதற்காக அதை வாங்குவது குறைவதே இல்லை.




Veblen goods என்பவை ஆடம்பர பொருள்களில் அடங்கும். உதாரணமாக, ரோலக்ஸ் வாட்ச். இதன் விலை எவ்வளவுதான் ஏறினாலும், அதை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். அதே போலத்தான் என்.எஃப்.டி.யும்.

இதன் விலை என்னதான் பொருளின் மதிப்பைவிட ஆயிரம் மடங்கு அதிகமானாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் இதை வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் இதற்கு Demand அதிகமாகிக் கொண்டே போகிறது. அதனால் விலையும், மதிப்புமே அதிகரிக்கிறது.

என்.எஃப்.டி என்பது இந்த மூன்று வகையிலும் வரக்கூடிய ஒரு வஸ்து என்றே சொல்லலாம். ஆனாலும், என்.எஃப்.டி.யின் விலை பெருமளவில் சரிய அதிக வாய்ப்புள்ளது என அதில் பணம் சம்பாதித்த பீப்ஸ் நிறுவன இயக்குநரே சொல்கிறார்.

இந்த என்.எஃப்.டி பெரும்பாலும் பணம் அதிகம் உள்ளவர்கள் செய்யும் அவசியமில்லா முதலீடு போல கருதப்பட்டது. ஆனால் நாளடைவில் எல்லாரும் என்.எஃப்.டி-யில் களமிறங்க, சாதாரண மக்களும் தற்போது இதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். ஒரு நாள் மக்கள் இதை வாங்குவதை நிறுத்திவிட்டால் என்.எஃப்.டி-யின் தேவை கண்டிப்பாக குறைந்து, விலையும் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்தியாவில் தற்போது சினிமா நட்சத்திரங்கள் மூலம் காலடி எடுத்துவைத்துள்ள என்.எஃப்.டி-க்கு மற்ற நாடுகளை போல வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் இடையே வேலை மற்றும் வாழ்க்கையில் உள்ள வேறுபாடு என்ன? - corporate culture in the Indian software industry compared to Western countries

 பத்து வருடங்கள் இந்திய நிறுவனங்களிலும், 4+ வருடங்களாக அமெரிக்க நிறுவனங்களிலும் பணியாற்றிய(பணியாற்றி வருகிற) அனுபவத்தில் எழுதுகிறேன்.



இந்தியாவில் மென்பொருள் சேவை நிறுவனங்களே அதிகம். நீங்கள் இந்தியாவில் மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற பெரிய ப்ராடக்ட் நிறுவனங்களில் முயற்சித்தால், உங்களுக்கு இந்த பதில் பொருந்தாது. ஏனெனில் இவை உலகெங்கிலும் ஒரே operating model/perks உடன்தான் இயங்கிவருகிறன.


இந்திய மென்பொருள் நிறுவனங்கள்


நேர்முகம்


பெரும்பாலும் 2 தொழிற்நுட்ப சுற்றுகள் மட்டுமே. ஒரு சுற்றில் Lead/Architect வகை நபரும், அடுத்த சுற்றில் மேலாளர்/சீனியரும் கேள்வி கேட்பார்கள். பெரும்பாலும் நீங்கள் skills என பட்டியலிடுபவையிலிருந்தே கேள்விகள் வரும். FAQs, Design Principles படித்து சென்றால் நிச்சயம் எளிதாக கடப்பீர்கள். நன்றாக பயமில்லாது உரையாடும் திறன் வேண்டும். இதற்குபிறகு HR சுற்று, verification நடக்கும்.


சம்பளம் (Compensation and Benefits)


இந்திய மார்கெட்டில் பெரும்பாலும் உங்கள் வருட அனுபவம் * 1.5 லட்சம் என்பது standard. 10 வருடம் எனில் குறைந்தது 15 லட்சம் வாங்கலாம். அதுதவிர பெருநகரங்களில் வாழ allowance, PF, Gratuity என்பவை கிடைக்கும். இந்த 15 லட்சம் என்பது minimum மட்டுமே. நீங்கள் நல்ல tech stack இல் இருப்பின் ஆண்டு அனுபவம் * 2.5 லட்சம் என்றுகூட பெருக்கிக் கேட்க முடியும், நான் கேட்டிருக்கிறேன்.


நீங்கள் managerial cadre எனில், முந்தைய நிறுவனத்தில் இருந்ததைவிட ஒரு level above முயல முடியும். நீங்கள் manager எனில், senior manager க்கு apply செய்யலாம். ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் சென்றால் 20–40% hike எதிர்பார்க்கலாம் சராசரியாக.


வேலை வாழ்க்கை (work life)


பெரும்பாலும் 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்து வெளியேற முடியாது. உங்கள் டீமில் 10 மணிநேரம் இருக்கிறார்கள் எனில் நீங்களும் இருந்தாக வேண்டும். ஒருவாரத்தில் 60 மணிநேரம் வேலை கொடுப்பது, ஆன்ஸைட் கால் எடுக்க சொல்வது, வேலை இருப்பின் சனி/ஞாயிறு வரசொல்லுவது இதெல்லாம் எழுதப்படாத விதி.


Timesheet இல் வாரத்தில் 40 மணிக்கு மேல் log செய்ய விடமாட்டார்கள் சில கஞ்ச மேனேஜர்கள், நம்ம மக்களும் appraisal க்கு பயந்து, அல்லது அடுத்த level செல்ல என 40 மணிநேர சம்பளம் வாங்கிக்கொண்டு, 60 மணிநேரம் வேலை செய்வார்கள். ஒரு 20% நிறுவனங்கள் overtimeக்கு பணம் தரலாம்.


நான் இந்தியாவில் இருந்தவரை காலை 7 மணிக்கு வெளியேறி, இரவு 8.30 க்குதான் வீடு வருவேன். பலநாள் cab service பயன்படுத்தி 11–12 க்குகூட வந்ததுண்டு (இலவசம்தான்).


திருமணம் ஆனவர்/குழந்தை இருக்கிறது எனில் கொஞ்சம் சலுகை கிடைக்கும்.


நம்நாட்டு கலாசாரமே நம்மை பெரியவர்களை மதிக்க கற்றுக்கொடுப்பதால், பெரும்பாலும் hierarchical மனநிலை உண்டு. உங்களைவிட 2 வருடம் சீனியர் என்றால்கூட நிறைய மரியாதை எதிர்பார்ப்பார்கள், மாற்றுகருத்தை பார்த்து பதவிசா சொல்லவும், arrogant, not a team player என்றுவிடுவார்கள். ஜாக்கிரதை!


நோட்டிஸ் பீரியட்/அப்ரைஸல்


அப்ரைஸல் வருடம் ஒருமுறை, 10%,5%,3% என்று பக்கெட்கள் வைத்து இருப்பார்கள் சம்பள உயர்வுக்கு, Bell curve படி நிறைய பேர் 3% தான் வாங்குவர். Promotion இருந்தால் அதிகம் கிடைக்கலாம்.

நோட்டிஸ் 6 வாரங்கள், இதை நீங்கள் பேசி 4 வாரமாக குறைக்க முடியும்.


அமெரிக்க நிறுவனங்கள்


நேர்முகம்


கோடிங் சுற்று- அல்காரிதம் எழுதவேண்டும். Geeksforgeeks, Hackerrank, Leetcode இதில் search/sort/tree/linked list என 15 நிமிடத்திற்குள் solve செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

தொழிற்நுட்ப சுற்றுகள்- 2–3 இருக்கும். உங்கள் பழைய project இல் இருந்து துவங்கி, எதை எப்படி implement செய்தீர்கள், design decisions, security architecture இதெல்லாம் உங்களுக்கு தலைகீழாக தெரிய வேண்டும். முந்தைய நாள் website இல் தேடி ஒப்பித்தால் போதாது.

மேலாளர் சுற்று- இவர் ஒரு challenge கொடு்த்து அதை எப்படி தீர்ப்பீர்கள் என கேட்பார். உதாரணமாக ‘என் தளத்தில் 20000 பயனர் இருக்கிறார்கள், நாளை 1 லட்சம் பேர் பயன்படுத்த வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?’ Scalability/High availability/on prem/cloud இதுபற்றி தெரிந்து இருக்க வேண்டும்.[1]

Non technical round- நீங்கள் நிறுவன கலாசாரத்திற்கு செட் (culturally fit) ஆவீர்களா என பார்ப்பார்கள், கொஞ்சம் சாதுர்ய புத்தி வேண்டும்.

இவை எல்லாம் முடிந்தால் offer கிடைக்கும்.

சம்பளம் (compensation and benefits)


Salary/Benefits negotiation எழுத்துபூர்வமாகவே நடக்கும். முதலில் ஒரு சம்பளம் நிர்நயம் செய்து, நீங்கள் நிராகரித்தால், எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என email மூலம் வினவுவார்கள், budget/interview performance பொறுத்து hire/no hire decision கிடைக்கும். சமயத்தில் ஒரேநாளில் முடிந்த நேர்முகத்தேர்விற்கு வாரகணக்கில் salary negotiation நடப்பதுண்டு. வேறு ஆஃபர் வாங்கி இருக்கீங்களா என்பார்கள். வாங்கியிருந்தால் ஈடுசெய்வார்கள்.


சம்பளம் தவிர Discounted stocks அல்லது Restricted Stock Units கிடைக்கும்.


உதாரணமாக நான் level 1 performer எனில், வருடம் 30 stock எனக்கு இலவசமாக நிறுவனம் கொடுக்கும். அதை விற்க நான் 2–3 வருடம் காத்து இருக்க வேண்டும். இதை vesting period என்பார்கள்.


Joining bonus என்றும் ஒன்று உண்டு, நீங்கள் கேட்ட சம்பளம் கொடுக்க முடியாவிடில் one time joining bonus ஆக கொடுத்துவிடுவார்கள். இதுதவிர health insurance, ரிடையர்மன்ட் benefits என பட்டியல் நீளும்.


Work life


8 மணிநேரம் மட்டுமே. அதிகநேரம் வேலை செய்தால், ஒன்று compensatory off கொடுப்பார்கள் அல்லது overtime pay கொடுப்பதுண்டு. Software Release/Patching போன்ற இரவுநேர பணி (night out) இருந்தால், மதியம் சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து வீடு சென்றுவிடலாம்.


இந்தியா போல hierarchy கிடையாது. ஊமையாக இருந்தால்தான் எதிர்விளைவுகள் இருக்கும். நான் என் Vice President வரை ஜாலியாக அரட்டை அடித்து எதிர்கருத்து சொல்வேன், சிரித்துகொண்டே கவனிப்பார்கள். பேர் சொல்லியே அழைப்பார்கள் எவ்வளவு சீனியர் எனினும். Ego clash வந்தால் HR வரை செல்லலாம், HR என்பவர் மேனேஜரின் ஊதுகுழலாக இருக்கமாட்டார்.


At will employment என்பர், நீங்கள் நினைத்த அன்றே வேலையை விடமுடியும், அவர்களும் ஒரேநாளில் உங்களை தூக்கலாம். பெரும்பாலும் 2 வாரம் notice period. அவ்வளவுதான்.


முடிவாக


இந்தியா ஒரு மக்கள்தொகை மிகுந்த நாடு. Engineers அதிகம், எனவே கொஞ்சம் மரியாதைகுறைவாக, taken for granted ஆக நடத்துவதாக தோன்றும். வெளிநாடுகள், முக்கியமாக western countries இல் கடுமையான சட்டங்கள், குறைவான மக்கள்தொகை, hire process இல் உள்ள சிக்கல்களால், மனிதர்களை மனிதர்களாக நடத்துவது உண்டு. இந்தியாவில் ஒரு நிறுவனத்திற்கும், பணியாளருக்கும் சண்டை/வழக்கு எனில், அதை lost cause என்பார்கள், அந்த பணியாளரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. மேற்கில் வழக்கே வந்துவிடக்கூடாது என நினைப்பார்கள், அந்தளவு சட்ட பாதுகாப்பு உண்டு.


நம்நாடும், corporate களை ராஜா மாதிரி நடத்தாமல், பணியாளர்களுக்கான சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும், அதற்கு ஊழலற்ற நிர்வாகம் வேண்டும், அதுவே காலத்தின் தேவை!

newest questions on wordpress